தமிழ்நாட்டில் புதியதாக 87 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோப்புப்படம்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வந்தநிலையில், தற்போது தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 87 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 45 ஆண்கள் மற்றும் 42 பெண்கள் அடங்குவார்கள்.
அதிகபட்சமாக சென்னையில் 16 பேருக்கும், கோவையில் 13 பேருக்கும், கன்னியாகுமரியில் 11 பேருக்கும் வெளிநாட்டு பயணி ஒருவர் உள்பட மொத்தம் 19 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 272 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 ஆயிரத்து 035 ஆக உள்ளது. தமிழ் நாட்டில் இன்று கொரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் இல்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






