புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் சிறையில் அடைப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
விசைப்படகுகள்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 163 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதேபோல் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 120 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மீன்பிடிக்க சென்றனர்
இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் செந்தில் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரை சேர்ந்த நடராஜன் மகன் அருண் (வயது 34), கோவிந்தராஜ் மகன் மருது (42), சோனை மகன் செல்வராஜ் (38), சேப்பான் மகன் சுந்தரம் (42), ஆகிய 4 மீனவர்களும், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரை சேர்ந்த கேசவன் (32), குமார் (38), முத்து (43), குணா (20), முருகேசன் (45) ஆகிய 5 மீனவர்களும் என மொத்தம் 9 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் நேற்று முன்எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.தினம் இரவு சுமார் 20 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அங்கு வந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
9 மீனவர்களும் நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதி, வருகிற 27-ந் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 9 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையானது அந்த 9 மீனவர்களின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.