காஞ்சீபுரத்தில் லாரி- பஸ் மோதலில் 9 பேர் காயம்


காஞ்சீபுரத்தில் லாரி- பஸ் மோதலில் 9 பேர் காயம்
x

காஞ்சீபுரத்தில் லாரி- பஸ் மோதலில் 9 பேர் காயம் அடைந்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் இருந்து பரனூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. சங்கராபுரம் அருகே செல்லும்போது காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பஸ்சின் முன் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ் டிரைவர் வெங்கடேசன், பஸ்சில் இருந்த ஊழியர்கள் 7 பேர் மற்றும் லாரி டிரைவர் அருள்ஜோதி என 9 பேர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story