காஞ்சீபுரம் அருகே 9 டன் ரேஷன் அரிசி சிக்கியது


காஞ்சீபுரம் அருகே 9 டன் ரேஷன் அரிசி சிக்கியது
x

காஞ்சீபுரம் அருகே 9 டன் கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 2 லாரிகளையும் கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குடிமைப் பொருள் மற்றும் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் இயக்குநர் காமினி, கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் சம்பத் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில். குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு தாசில்தார் இந்துமதி உள்ளிட்ட அதிகாரிகள் இரவு காஞ்சீபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, பயன்பாடில்லாத ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு ரேஷன் அரிசியை சிலர் மாற்றிக்கொண்டிருந்தனர். அதிகாரிகளைக் கண்டவுடன் அங்கு இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதனை தொடர்ந்து 2 லாரிகளிலும் சோதனை செய்தபோது 40 கிலோ எடை கொண்ட 250 பிளாஸ்டிக் பைகளில் 9 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 லாரிகளையும் கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.


Next Story