முத்தியால்பேட்டை தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து சாவு


முத்தியால்பேட்டை தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து சாவு
x

முத்தியால்பேட்டை தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

சென்னை

சென்னை ஏழுகிணறு தையப்ப முதல் தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் கங்காதரன் (வயது 15). இவர் சென்னை முத்தியால்பேட்டை பிரகாசம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவன் கங்காதரன் மாடிப்படி ஏறும்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதை பார்த்த சக நண்பர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர் உடனே ஆசிரியர்கள் கங்காதரனை மீட்டு, சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த கங்காதரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து முக்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவனுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததும், வலிப்பு நோய் ஏற்பட்டதில், கீழே விழுந்து பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாணவனின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு மாணவன் இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story