4 பேர் கொண்ட பாஜக குழு நாளை தமிழகம் வருகை


4 பேர் கொண்ட பாஜக குழு நாளை தமிழகம் வருகை
x

கோப்புப்படம் 

பாஜகவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய 4 பேர் குழு நாளை தமிழகம் வருகிறது.

சென்னை,

சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டுக்கு முன்பு நடப்பட்ட பாஜக கொடி கம்பத்தை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதனால் தமிழக அரசு பாஜகவை வெறுப்புணர்வுடன் கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் மாநில அரசால் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் நட்டா அமைத்துள்ளார். இதன்படி சதானந்த கவுடா, சத்ய பால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் கொண்ட குழு நாளை தமிழ்நாடு வருகிறது.

பாஜகவுக்கு எதிராக மாநில அரசு செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வருகிற 4 பேர் கொண்ட இந்த குழு, நாளை மறுநாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தில் ஆலோசனை நடத்துகிறது.

1 More update

Next Story