திருமுல்லைவாயலில் ஊஞ்சலில் விளையாடிய 5 வயது சிறுவன் சாவு


திருமுல்லைவாயலில் ஊஞ்சலில் விளையாடிய 5 வயது சிறுவன் சாவு
x

திருமுல்லைவாயலில் ஊஞ்சலில் விளையாடிய 5 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான்.

சென்னை

திருமுல்லைவாயல் மூர்த்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன். தனியார் டிரால்வஸ் பஸ்சில் டிரைவராக உள்ளார். இவருடைய மனைவி மீனா. இவர்களுக்கு ஜஸ்வந்த் (வயது 5), மயிலேஷ் (2) என 2 மகன்கள்.

இவர்களில் ஜஸ்வந்த், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை ஜஸ்வந்த் வீட்டில் புடவையால் கட்டி இருந்த ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தான். ஜஸ்வந்த் ஊஞ்சலில் உட்கார்ந்து வேகமாக சுற்றிவிட்டு விளையாடியபோது திடீரென மயங்கி விழுந்தான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர், ஜஸ்வந்தை அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் ஜஸ்வந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story