சோமங்கலம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வடமாநில வாலிபர் கைது


சோமங்கலம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வடமாநில வாலிபர் கைது
x

சோமங்கலம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 7 வயது சிறுமி. 3-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளிக்கு சென்று அங்கே விளையாடி கொண்டிருந்த மாணவியை திடீரென காணவில்லை. அந்த பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வடமாநில வாலிபர் சிறுமியிடம் பேச்சு கொடுப்பது போல் அருகே உள்ள கழிவறை கட்டிட பகுதிக்கு அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை அறிந்த அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்றனர். பொதுமக்கள் வருவதை பார்த்த வாலிபர் அங்கிருந்து ஓட தொடங்கினார். பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை அடித்து உதைத்து சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சோமங்கலம் போலீசார் அந்த நபரை கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில், அந்த நபர் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரம்ஜான் (வயது 26) என்பதும், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்தது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரம்ஜானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story