தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய காளை மாடு - மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கலெக்டர்


x

வேலூர் அருகே காரில் சிக்கி விபத்துக்குள்ளான காளை மாட்டை மாவட்ட கலெக்டர் மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

வேலூர்,

வேலூர் அருகே காரில் சிக்கி விபத்துக்குள்ளான காளை மாட்டை மாவட்ட கலெக்டர் மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், பிள்ளையார்குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சத்துவாச்சாரியில் உள்ள தனது அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். சத்துவாச்சாரி காவல் நிலையம் அருகே, நெடுஞ்சாலையில் குறுக்கே சென்ற காளை மாடு மீது ஒரு கார் மோதியது. இதில் காயமடைந்த காளை மாடு சாலையில் விழுந்து கிடந்தது.

இதையறிந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன், காரை நிறுத்திவிட்டு வேகமாக சென்று விபத்தில் காயமடைந்த மாட்டை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மாவட்ட கலெக்டரின் செயலைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.


Next Story