வீட்டில் பட்டாசு தயாரித்தவர் மீது வழக்கு


வீட்டில் பட்டாசு தயாரித்தவர் மீது வழக்கு
x

திருவள்ளூர் அருகே வீட்டில் பட்டாசு தயாரித்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பட்டறை பள்ளத்தெருவில் வீட்டில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டுவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு, திருவள்ளூர் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அந்த பகுதிக்கு சென்று சோதனையிட்டபோது சசிகுமார் (வயது 41) என்பவர் உரிய அனுமதியின்றி வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பட்டாசு தயாரிப்பதற்காக வைத்திருந்த சுமார் 100 கிலோ மூல பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story