தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு


தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
x

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். இவருடைய மனைவி ஜெயந்தி. கூலித்தொழிலாளர்களான இவர்கள் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமி ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயந்தி கூச்சலிடவே அந்த மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story