விருகம்பாக்கத்தில் பாரில் குடிபோதையில் ரகளை; தட்டிக்கேட்ட ஊழியர் மீது தாக்குதல் - 2 பேர் கைது


விருகம்பாக்கத்தில் பாரில் குடிபோதையில் ரகளை; தட்டிக்கேட்ட ஊழியர் மீது தாக்குதல் - 2 பேர் கைது
x

விருகம்பாக்கத்தில் பாரில் குடிபோதையில் ரகளையில் ஈடுப்பட்டவர்களை தட்டிக்கேட்ட ஊழியரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இதன் அருகிலேயே பார் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 3 வாலிபர்கள், பாரில் மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் பாருக்குள் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனை தட்டிக்கேட்ட பார் ஊழியர் பஞ்சாட்சரம் என்பவரை அருகில் கிடந்த உருட்டுகட்டை மற்றும் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த பஞ்சாட்சரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற திருட்டு ராஜேஷ் (வயது 21), திருநாவுக்கரசு (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளி அஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story