திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து


திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
x

திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை

சென்னை திருவான்மியூர் கலாசத்திரம் 2-வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிவதற்குள் அந்த வீட்டில் வசிக்கும் சலீம்பாஷா, சகிதா ஆகியோர் வேகமாக வெளியேறி விட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து திருவான்மியூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தீ மற்ற வீடுகளுக்கு பரவாத வகையில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மக்கள் நிம்மதி பெருவீச்சு விட்டனர். தீ விபத்து குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.


Next Story