காசிமேட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் வலையில் சிக்கி பலி


காசிமேட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் வலையில் சிக்கி பலி
x

காசிமேட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் வலையில் சிக்கி பலியானார்.

சென்னை

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 23-ந்தேதி செல்வழகன் என்பவருக்கு சொந்தமான பெரிய வகை விசைப்படகில் 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் மாலை மீன்பிடிக்க வலை விரித்து போட்டுக்கொண்டிருந்தபோது காசிமேடு ஜி.எம்.பேட்டையை சேர்ந்த பிரபாகரன் (வயது 55) என்ற மீனவரின் கால் வலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் அவசர அவசரமாக வலையை மேலே இழுத்து பிரபாகரனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் பிரபாகரன் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து விட்டார். பின்னர் அவரது உடலோடு கரை திரும்பிய மீனவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பலியான மீனவர் பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story