வீட்டில் புதையல் இருப்பதாக கூறி தனியாக இருந்த பெண்ணிடம் மந்திரவாதி கைவரிசை
சேலம் மாவட்டத்தில் வீட்டில் புதையல் இருப்பதாக கூறி தனியாக இருந்த பெண்ணிடம் பணம் பறித்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கீரப்பட்டி மலை கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பழனியம்மாள் என்பவரிடம் குறி சொல்வதாக கூறி பேச ஆரம்பித்துள்ளார்.
அப்போது, அவரின் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதை எடுக்காவிட்டால் மூத்த மகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதற்காக, வீட்டின் பூஜையறையில் கலசம் வைத்து வழிபட கூறிய செல்வராஜ், அதற்காக 96 ஆயிரம் ரூபாய் வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தொடர்ந்து காரணம் கூறி செல்வராஜ் காலம் தாழ்த்தி வந்ததால் சந்தேகமடைந்த பழனியம்மாள் போலீசில் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story