எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பா...! தே.மு.தி.க. சுதீஷ் விளக்கம்


எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பா...! தே.மு.தி.க. சுதீஷ் விளக்கம்
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அறிவித்து கட்சியின் சார்பாக வேட்பாளரும் அறிவித்திருந்தனர்.

சென்னை

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா சமீபத்தில் காலமானார். இதனால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 27-ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், நாளை, அதாவது ஜனவரி 31-ம் தேதி தொடங்கவிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியிருக்கிறது.

இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டுவரும் நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேமுதிகவின் துணைச் செயலாளர் சுதீஷ் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று மாலை சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் இந்த சந்திக்கபோவதாக தகவல் பரவியது.

ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அறிவித்து கட்சியின் சார்பாக வேட்பாளரும் அறிவித்திருந்தனர். நாளை வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது என கூறப்பட்டது.

ஆனால் இதுகுறித்து தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான் சந்திக்க செல்வதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அந்த தகவல் தவறானது. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் வருகிற 1-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இவ்வாறு சுதீஷ் கூறி உள்ளார்.


Next Story