'ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை கொள்ளும் தருணம்' - விராட் கோலிக்கு விஜயகாந்த் வாழ்த்து


ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை கொள்ளும் தருணம் - விராட் கோலிக்கு விஜயகாந்த் வாழ்த்து
x

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

சென்னை,

உலகக்கோப்பை தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதி வருகிறது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் விராட் கோலி 117 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார்.

ஒருநாள் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த நிலையில் விராட் கோலி 50-வது சதமடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். 279 ஒருநாள் இன்னிங்சில் விளையாடியுள்ள விராட் கோலி தனது 50-வது சதத்தை நிறைவு செய்தார்.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம் அடித்து சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவரது அதிகாரபூர்வ எக்ஸ் சமூகவலைத்தளத்தில்,

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் ஏறத்தாழ 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை கொள்ளும் தருணமாகும். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மேலும் மேலும் பல சாதனைகளை படைத்து இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்று வாழ்த்தியுள்ளார்.


Next Story