போலீசாருக்கு புதிய மோட்டார் சைக்கிள்


போலீசாருக்கு புதிய மோட்டார் சைக்கிள்
x
தினத்தந்தி 30 Sept 2023 12:30 AM IST (Updated: 30 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயம்புத்தூர்

கோவை


கோவை மாநகரில் உக்கடம், பீளமேடு, காட்டூர், போத்தனூர், குனியமுத்தூர், சிங்காநல்லூர், ரேஸ்கோர்ஸ் உள்பட 15 போலீஸ் நிலையங்கள் இருந்தன. தற்போது புதிதாக கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புக்கடை ஆகிய 3 புதிய போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டன. இதுதவிர துடியலூர், கவுண்டம்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்கள் மாநகரத்துடன் இணைக்கப்பட்டது.


இந்த நிலையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ள கவுண்டம்பா ளையம், சுந்தராபுரம், கரும்புன்கடை ஆகிய போலீஸ் நிலையங்க ளுக்கு தலா ஒரு கார் கடந்த மாதம் வழங்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து ஒரு போலீஸ் நிலையத்திற்கு தலா 2 மோட்டார் சைக்கிள் வீதம் 6 மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போலீசாருக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கினார்.

இந்த மோட்டார் சைக்கிள்களில் போலீசார் ரோந்து உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர். கோவை மாநகர போலீசாரின் பயன்பாட்டிற்கு புதிய வாகனங்கள் அடுத்த மாதம் வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story