குடிபோதையில் சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற வடமாநில வாலிபர் கைது


குடிபோதையில் சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற வடமாநில வாலிபர் கைது
x

வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வட மாநில வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சென்னை

ராயபுரம்:

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் 2 பேரும் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது போதை ஆசாமி ஒருவர் அங்கு வந்துள்ளார்.

குடிபோதையில் இருந்த அந்த வாலிபர் சாலையில் விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராயப்புரம் போலீசார் வாலிபரை கைது செய்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அந்த போதை ஆசாமி ஒடிசா மாநிலம் துர்காப்பூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் பெகரா (வயது 23) என்பதும் குடிபோதையில் இதுபோன்று நடந்தது கொண்டதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து சஞ்சய் பெகரா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story