செஸ் ஒலிம்பியாட் போட்டி: போலீசார் பைக்கில் விழிப்புணர்வு பேரணி
44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருப்பதையொட்டி பரங்கிமலையில் போலீசார் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சென்னை
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற 28ந் தேதி தொடங்கிறது. இந்த போட்டி குறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் சென்னையை அடுத்த பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் அமீர் அகமது, மீனம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் புகழேந்தி ஆகியோர் தலைமையில் போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
பரங்கிமலையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மோட்டார் சைக்கிளில் போலீசார் ஊர்வலமாக சென்றனர். அப்போது செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story