வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் மீது வழக்கு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் மீது வழக்கு
x

வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் முத்துமணி என்கிற சதீஷ் (வயது 27). செல்வத்தின் சகோதரர் முருகன். இவருக்கு இளமாறன், சுதர்சன், கவுதம் என 3 மகன்கள் உள்ளனர். இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் முருகன், செல்வம் வீட்டு வாசலில் தொடர்ந்து சிறுநீர் கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துமணி இதுகுறித்து இளமாறன், கவுதம், சுதர்சன் ஆகியோரிடம் கேட்டபோது, இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து முருகனின் மகன்கள் 3 பேர் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய 4 பேரும் சேர்ந்து வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த முத்துமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீசார் இளமாறன், சுதர்சன், கவுதம், வெள்ளைச்சாமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story