தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு


தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு
x

திருத்தணி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரெயிலில் அடிபட்டு வாலிபர் சம்பவ இடத்திலேயே பரி தாபமாக இறந்தார்.

திருவள்ளூர்

திருத்தணி புதிய புறவழிசாலை ரெயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில், அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் சடலத்தை மீட்டு அரக்கோணம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து ரெயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த நபர் திருத்தணி எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 35) என தெரிந்தது. இவர் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை புறவழிச்சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே சீனிவாசன் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரெயில் மோதியதில் அவர் சம்பவ இடத்தில் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சீனிவாசனுக்கு சண்முகப்பிரியா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story