திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் மோதி வாலிபர் பலி


திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் மோதி வாலிபர் பலி
x

திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் மோதி வாலிபர் பலியானார்.

சென்னை

திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராகேஷ் (வயது 25). டிப்ளமோ படித்து விட்டு திருவொற்றியூரில் உள்ள மோட்டார் சைக்கிள் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். ராகேஷ், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து நேற்று காலை வீட்டுக்கு திரும்பி சென்றார். இதற்காக திருவொற்றியூர் ெரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரெயில் ராகேஷ் மீது மோதியது. இதில் இடது கால் தூண்டாகி தலையில் பலத்த காயம் அடைந்த ராகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி கொருக்குப்பேட்டை ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story