சேலம்: சிறுமியை கிண்டல் செய்த வாலிபருக்கு தர்ம அடி..!


சேலம்: சிறுமியை கிண்டல் செய்த வாலிபருக்கு தர்ம அடி..!
x

சேலம் அருகே சிறுமியை கிண்டல் செய்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

சேலம்:

சேலம் தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மதன் (வயது 20). சிறுமி ஒருவரை மதன் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாலிபர் மதனை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் வாலிபரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வாலிபர் மதனை அழைத்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியை கிண்டல் செய்த வாலிபரை உறவினர்கள் ஒன்று திரண்டு தாக்கியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story