பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது


பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது
x

பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பேரம்பாக்கம் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி அங்கிருந்த பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தி கொண்டிருந்தார். மேலும் அவர் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நின்று ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதை தொடர்ந்து போலீசார் அந்த நபரை பிடித்து அவரிடம் இருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் பேரம்பாக்கம் அருகே உள்ள சத்தரை கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் என்கின்ற அருண் (வயது 26) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story