சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் லாரி தாறுமாறாக ஓடி டிராக்டர் உள்பட 3 வாகனங்கள் மீது மோதல் - போக்குவரத்து பாதிப்பு


சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் லாரி தாறுமாறாக ஓடி டிராக்டர் உள்பட 3 வாகனங்கள் மீது மோதல் - போக்குவரத்து பாதிப்பு
x

சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் லாரி தாறுமாறாக ஓடி டிராக்டர் உள்பட 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் எதிரே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு நேற்று காலை சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் நோக்கிச் லாரி ஒன்று சென்றது. அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி எதிரே வந்த டிராக்டர் மற்றும் மினிவேன், கார் ஆகியவற்றின் மீது கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆனால், இந்த விபத்தால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது. தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தை கொண்டு விபத்தில் சிக்கி வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story