இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் தவறி விழுந்து சாவு


இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் தவறி விழுந்து சாவு
x

இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் தவறி விழுந்து இறந்தார்.

விருதுநகர்

விருதுநகர் இந்திரா நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது38). இவருடைய மனைவி முத்து என்ற முத்துலட்சுமி (38). பாலமுருகன் தனது மனைவிக்கு தாலி செயின் செய்வதற்காக காசுக்கடை பஜாரில் உள்ள நகைக்கடையில் ஆர்டர் கொடுத்திருந்தார்.

இந்தநிலையில் செயினை வாங்குவதற்காக மனைவியுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். தனது குழந்தை ஹர்சிகாவை இருசக்கர வாகனத்தின் முன்னால் உட்கார வைத்திருந்தார்.

விருதுநகர் கச்சேரி ரோட்டில் வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த முத்து என்ற முத்துலட்சுமி தவறி கீழே விழுந்தார்.உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முத்துலட்சுமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மோட்டார்சைக்கிளில் இருந்து பெண் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story