மளிகை கடையில் புகையிலை விற்ற பெண் கைது


மளிகை கடையில் புகையிலை விற்ற பெண் கைது
x

வி.கைகாட்டி அருகே மளிகை கடையில் புகையிலை விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

வி.கைகாட்டி அருகே உள்ள காட்டுப்பிரிங்கியம், பாலக்கரை பகுதியில் உள்ள மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அங்குள்ள பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காட்டுப்பிரிங்கியம் பாலக்கரையை சேர்ந்த லதா (வயது 50) என்பவர் தனது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story