சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர்


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர்
x

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் சிறுமியிடம் அத்து மீறிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னை

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வழியாக பெங்களூரில் இருந்து பீகார் மாநிலம் தானாப்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒருவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த ரெயில் நேற்று காலை சென்டிரல் ரெயில் நிலையம் வந்து நின்றது. அப்போது சிறுமி கழிவறைக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு பிறகு அழுதுகொண்டே வந்த சிறுமி, கழிவறையில் தன்னிடம் நபர் ஒருவர் அத்துமீறி தவறாக நடக்க முயன்றதாக அழுதுகொண்டே பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் பதறிபோன சிறுமியின் தந்தை இது குறித்து சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து விரைந்து வந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சிறுமி அடையாளம் காட்டிய வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி நகரை சேர்ந்த தீபக் (வயது 30) என்பதும், அவர் அதே ரெயிலில் துப்புரவு பணியாளராக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.


Next Story