சமூக வலைதளம் மூலம் பழகி திருமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர்


சமூக வலைதளம் மூலம் பழகி திருமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர்
x

சமூக வலைதளம் மூலம் பழகி, இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், கிண்டி மகளிர் போலீசில் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

சென்னை

மடிப்பாக்கம் ராம் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ராகுல் சிராஜ் (வயது 23). சமூக வலைதளம் மூலம் எனக்கு அறிமுகமாகி, நட்பாக பழகினார். ஒரே பகுதியில் வசிப்பதால் என்னை காதலிப்பதாக கூறினார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்தார்.

பின்னர் வெளியே செல்லலாம் எனக்கூறி துரைப்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று என்னுடன் பாலியல் உறவு கொண்டார். பல முறை இதுபோல் பாலியல் உறவு கொண்ட ராகுல் சிராஜ், தனது குடும்ப கஷ்டத்தை சொல்லி தொழில் தொடங்க வேண்டும் என என்னிடம் ரூ.10 லட்சம் வரை பெற்றுக்கொண்டார். ஆனால் தற்போது என்னை திருமணம் செய்ய மறுத்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதுபற்றி கிண்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல் சிராஜை தேடி வந்தனர். இந்தநிலையில் நாகர்கோவிலில் உள்ள அவரது மாமா வீட்டில் பதுங்கி இருந்த ராகுல் சிராஜை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story