குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தை அடுத்த களியப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர் தச்சராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (வயது 23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பரமேஸ்வரனுக்கும் ரம்யாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ரம்யா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரம்யாவிற்கு திருமணம் ஆகி 3 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யஞ்சேரி காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (28), இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பிரபாகரன் தனது உறவினர் வீட்டு சவ ஊர்வலத்தில் நடனமாடியதை அவரது தந்தை கண்டித்ததாகவும், இதனால் மனமுடைந்த பிரபாகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story