உளுந்தூர்பேட்டை அருகே பசுமாட்டை திருடிய வாலிபர் கைது


உளுந்தூர்பேட்டை அருகே பசுமாட்டை திருடிய வாலிபர் கைது
x

உளுந்தூர்பேட்டை அருகே பசுமாட்டை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் அய்யப்பன் (வயது 29). சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டில் பசுமாட்டை கட்டியிருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது பசுமாட்டை காணவில்லை. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பல இ்டங்களில் தேடியும் மாடு கிடைக்கவில்லை. அதை யாரோ மர்மநபர் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து அய்யப்பன் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சிவனேசன் (27) என்பவர் பசுமாட்டை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவனேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story