பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா


பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடந்தது.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் ஆடி கிருத்திகையை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி மாட வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story