கொடுங்கையூரில் ஏ.சி. மெக்கானிக் வீட்டில் திருட்டு


கொடுங்கையூரில் ஏ.சி. மெக்கானிக் வீட்டில் திருட்டு
x

கொடுங்கையூரில் ஏ.சி. மெக்கானிக் வீட்டில் நகை - பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரியை சேர்ந்தவர் ஜெகதீஷ். ஏ.சி. மெக்கானிக்கான இவர், வியாசர்பாடி சஞ்சய் நகர் எம்.பி.எம். தெருவில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். தன்னுடைய தம்பி ஜோசப் என்பவருடன் இந்த கடையை நடத்தி வந்தார். ஜெகதீஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். ஜோசப் மட்டும் கடையை கவனித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜோசப் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றபோது மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் மற்றும் பொருட்களை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story
  • chat