ஓசூர் அருகே போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளி - துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
ஓசூர் அருகே போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
ஓசூர்,
ஆந்திராவைச் சேர்ந்த நாம்தார் உசேன் என்பவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையிலுள்ளன. இந்த நிலையில் குற்றவழக்கு விசாரணைக்காக நாம்தார் உசேனை ஓசூருக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு வைத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் நாம்தார் உசேன், போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார்.
கத்தியால் தாக்கியதில் எஸ்.ஐ, தலைமை காவலர் மற்றும் முதல்நிலை காவலர் என மூன்று போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து தற்காப்புக்காக எஸ்.ஐ துப்பாக்கியால் உசேனை சுட்டுள்ளார். இதில் நாம்தார் உசேனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் காயமடைந்த எஸ்.ஐ உள்ளிட்ட 3 போலீசாரும் குற்றவாளி நாம்தார் உசேனும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story