"பிளாஸ்டிக் அல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை" - அமைச்சர் மெய்யநாதன் பேச்சு


பிளாஸ்டிக் அல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
x

இலவச பேருந்து பயணம் திட்டத்தின் மூலம் பெண்களின் இருசக்கர வாகன பயன்பாடு குறைந்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் குறிப்பிட்டார்.

சென்னை,

சுத்தமான காற்று மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கியது. இதன் துவக்க நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், பிளாஸ்டிக் அல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழக அரசின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தின் மூலம் பெண்களின் இருசக்கர வாகன பயன்பாடு குறைந்துள்ளது எனவும் அமைச்சர் மெய்யநாதன் குறிப்பிட்டார்.

1 More update

Next Story