நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இன்று ஆலோசனை


நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 19 Feb 2024 7:14 AM IST (Updated: 19 Feb 2024 8:22 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

சென்னை,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். கட்சியின் மாவட்ட தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.


Next Story