அ.தி.மு.க.நிர்வாகியை தாக்கிய பா.ம.க. பிரமுகர் கைது


அ.தி.மு.க.நிர்வாகியை தாக்கிய பா.ம.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 16 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க.நிர்வாகியை தாக்கிய பா.ம.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் பக்கிரி (வயது 51). அ.தி.மு.க.நிர்வாகி. அதே பகுதியை சேர்ந்தவர் சத்யா (45). பா.ம.க. மாவட்ட துணை செயலாளர்.இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையின் முன்பு பக்கிரி நின்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கும் அங்கு வந்த சத்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சத்யா, பக்கிரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பக்கிரி அளித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story