அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2023 12:30 AM IST (Updated: 6 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை நகராட்சியில் அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் தலைவா் ராமலெட்சுமியில் நடைபெற்றது. துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், பொறியாளா் முகைதீன் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

இதில் தி.மு.க. உறுப்பினா்கள் எஸ்.எம்.ரஹீம், இசக்கிதுரை பாண்டியன், மேரி, பேபி ரெசவு பாத்திமா, பினாஷா, சந்திரா. சரவணகார்த்திகை, காங்கிரஸ் கவுன்சிலர் முருகையா, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முத்துப்பாண்டி, ஜெகன், சுப்பிரமணியன் சரஸ்வதி, இந்துமதி, சுகந்தி, ராதா, சுடர்ஒளி, பா.ஜ.க. கவுன்சிலர்கள் வேம்புராஜ், ராம்குமார், செண்பகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஜெகன், சுடர்ஒளி, சுப்பிரமணியன், பா.ஜ.க. கவுன்சிலர்கள் வேம்புராஜ், ராம்குமார் ஆகியோர் நகர்மன்ற தலைவா் மீது குற்றச்சாட்டுகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வாசிக்க தொடங்கினர். அப்போது, தலைவா் ராமலெட்சுமி தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட பிறகு உறுப்பினர்கள் தங்களது குறைகளை தெரிவியுங்கள் என கூறினார். ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினா்கள் செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில், புதிய தீர்மானங்களை வாசித்து உறுப்பினா்களின் கருத்துகளை கேட்கமாலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறி கடந்த கூட்டங்களில் வெளிநடப்பு செய்த நிலையில், அதேபோன்று தற்போது செய்தால் எப்படி வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிப்பது என கேள்வி எழுப்பினர்.

இதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தலைவர் ராமலெட்சுமி மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டதாக கூறிச் சென்றனர்.

பின்னர் நகராட்சி துணை தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள், நேற்று மற்றும் பழைய தீர்மானங்கள் உள்பட 17 தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது எனக்கூறி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பொறியாளா் முகைதீன் அபுபக்கரிடம் மனு அளித்தனர்.

தொடர்ந்து, அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் நகராட்சி தலைவரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியபடி கூட்ட அரங்கில் சிறிது நேரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.


Next Story