அ.தி.மு.க கவுன்சிலர் வீட்டில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


அ.தி.மு.க கவுன்சிலர் வீட்டில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

திருவள்ளூரில் அ.தி.மு.க கவுன்சிலர் வீட்டில் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸ் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் பெரியகுப்பம் கம்பர் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 55). இவரது மனைவி சித்ரா. இவர் திருவள்ளூர் நகராட்சியில் 22-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்- மனைவி இருவரும் காலை வீட்டை பூட்டிக் விட்டு மருத்துவ பரிசோதனைக்கு ஆவடியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மருத்துவ பரிசோதனையை முடிந்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்தனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2,000 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து சித்ரா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமாரா பதிவுகளை சோதனை செய்து வருகின்றனர்.


Next Story