'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது' - பண்ருட்டி ராமச்சந்திரன்


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது - பண்ருட்டி ராமச்சந்திரன்
x
தினத்தந்தி 18 March 2023 6:47 AM GMT (Updated: 2023-03-18T13:47:19+05:30)

தேர்தல் என்றால் முறையான கால அவகாசத்துடன் உரிய முறையில் நடைபெற வேண்டும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வரும் 26-ந்தேதி நடைபெறும் நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி போடியிட்டின்றி தேர்வு ஆக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என்றும் தேர்தல் என்றால் முறையான கால அவகாசத்துடன் உரிய முறையில் நடைபெற வேண்டும் என்றும் கூறினார்.


Next Story