உச்சகட்ட பரபரப்பு; பொதுக்குழு நோக்கி ஈபிஎஸ் பயணம் - ஓபிஎஸ் இல்லத்தில் குவியும் ஆதரவாளர்கள்...!


உச்சகட்ட பரபரப்பு; பொதுக்குழு நோக்கி ஈபிஎஸ் பயணம் - ஓபிஎஸ் இல்லத்தில் குவியும் ஆதரவாளர்கள்...!
x

ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் குவிந்து வரும் நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஈபிஎஸ் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சென்னை,

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. ஆனால், பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு அறிவிக்க உள்ளது. அந்த தீர்ப்பை பொறுத்தே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? நடைபெறாதா? என்பது தெரியும்.

இதனிடையே, பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி காலை 6.45 மணிக்கே தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். அவர் தற்போது பொதுக்குழு நடைபெறும் வானகரம் நோக்கி பயணித்து வருகிறார்.

இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் அவரது ஆதரவாளர்களும் குவிந்து வருகின்றனர். ஒருபக்கம் பொதுக்குழு நோக்கி அதிமுகவினர் குவிந்து வரும் நிலையில் மறுபக்கம் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் குவிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு வைத்திலிங்கம் வந்துள்ளார்.

வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், தீர்ப்பு வந்த பின் அடுத்த நடவடிக்கையை கூறுவோம்' என்றார்.

1 More update

Next Story