ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது? முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, புகழேந்தி பதில்


ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது?  முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, புகழேந்தி பதில்
x

ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது? கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, புகழேந்தி பதில் அளிக்க இருக்கின்றனர்.

ஹலோ எப்.எம். ஸ்பாட்லைட் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒலிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில், அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகழேந்தியும் பங்கேற்று பேசுகின்றனர்.

அதிலும் குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அதிகார போட்டி நிலவி வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்பதற்கு பதில் அளிப்பதோடு, தொகுதியில் எதிர்கட்சிகளின் நிலை பற்றியும் பேசுகின்றனர்.

மேலும், இடைக்கால பொதுச்செயலாளர் விவகாரம் குறித்தும், சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் ஆணையத்தால் கூறப்பட்ட விஷயங்கள் குறித்தும் 2 பேரும் விரிவாக பேச உள்ளனர். இதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க. தொடர்பாக நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கும் அவர்கள் பதில் அளிக்க இருக்கின்றனர்.


Next Story