வாலிகண்டபுரத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


வாலிகண்டபுரத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x

வாலிகண்டபுரத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள வாலிகண்டபுரத்தில் அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. குறிப்பாக அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி ஏமாற்றி விட்டனர். மு.க.ஸ்டாலின் வாரிசு அரசியல் தான் செய்கிறார். ஆனால் அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் கிடையாது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி ஒரு கிளைச்செயலாளராக இருந்து படிப்படியாக அரசியலில் உயர் பதவிகளை வகித்து பின்னர் முதல்-அமைச்சராக ஆனவர். விவசாயிகளின் கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வரும் ஒரே கட்சி அ.தி.மு.க. தான். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story