எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
x

52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அரியலூரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் 5 ஊராட்சி ஒன்றியங்கள், 2 நகராட்சிகள், 2 பேரூராட்சிகள் மற்றும் 201 கிராம ஊராட்சிகளில் அந்தந்த பகுதியை சார்ந்த கட்சி பொறுப்பாளர்களால் கொண்டாடப்பட்டது. இதில் அரியலூர் நகரில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடினார்கள். பின்னர் எம்.பி. கோவில் தெரு, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்ரமணியன், செல்வராஜ், நகர செயலாளர் செந்தில் உள்பட அனைத்து அணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.


Next Story