அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு கலந்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், திருப்பதி திருமலை தேவஸ்தான சிறப்பு அறங்காவலர் குழு பிரதிநிதியுமான குமரகுரு தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ,, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அழகுவேல்பாபு, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை
இதில் மாவட்ட செயலாளர் குமரகுரு, செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை சரி செய்ய தவறிய தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளரும், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவருமான ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், தியாகதுருகம் நகர செயலாளர் ஷியாம் சுந்தர், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் வினோத்குமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜான் பாஷா, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தங்கபாண்டியன் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.