அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
சேலம்
எடப்பாடி:
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் உள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பூர்வீக வீட்டில் நேற்று தேசியக்கொடி பறக்க விடப்பட்டது. இந்த வீட்டில் எடப்பாடி பழனிசாமியின் அண்ணன் கோவிந்தராஜ் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் நேற்று உறவினர்களுடன், வீட்டில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். இதேபோல் சிலுவம்பாளையத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
Related Tags :
Next Story