வேளாண் வளர்ச்சி திட்டம்


வேளாண் வளர்ச்சி திட்டம்
x

காஞ்சீபுரம் அருகே அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் அருகே வாரணவாசி ஊராட்சி தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமோகனசுந்தரம் தொடங்கி வைத்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் க.மோகனசுந்தரம் முன்னிலையில் வகித்தார்.

வாரணவாசி ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏகவள்ளி அண்ணப்பன், தொழிலதிபர்கள் எம்.வினோத்குமார், எம்.பிரித்திவிராஜ் மற்றும் வாரணவாசி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story