திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய எந்திரங்களை இ-வாடகை மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் - கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய எந்திரங்களை இ-வாடகை மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் - கலெக்டர் தகவல்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய எந்திரங்களை இ- வாடகை மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை திருவள்ளூர் மாவட்டத்தில் 2 மண் அள்ளும் எந்திரம், 10 உழுவை எந்திரங்கள், 2 சக்கர வகை மண் அள்ளும் எந்திரம் போன்றவை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. மண் அள்ளும் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு டீசலுடன் சேர்த்து ரூ.970, உழுவை எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு டீசலுடன் சேர்த்து ரூ.400, சக்கர வகை மண் அள்ளும் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு டீசலுடன் சேர்த்து ரூ.760 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் டிராக்டருடன் இணைந்து கீழ்க்கண்டவை வாடகைக்கு வழங்கப்படுகிறது.

சுழல் கலப்பை, 9 கொத்து கலப்பை, 5 கொத்து கலப்பை, வரப்பு அமைக்கும் கருவி, துகளாக்கும் கருவி, குழி எடுக்கும் கருவி, வைக்கோல் பிரித்தெடுக்கும் கருவி, வைக்கோல் கட்டும் கருவி, கரும்பு நடவு எந்திரம், வட்டு கலப்பை, இறக்கை கலப்பை, உளி கலப்பை, பல வகை தானியம் கதிரடிக்கும் எந்திரம், குழி தோண்டும் கருவி.

எனவே ஆர்வமுள்ள விவசாயிகள் மேற்கண்ட விவசாய எந்திரங்கள், கருவிகள் வாடகையில் பெற உழவன் செயலியில் வேளாண்மை பொறியியல் துறை எந்திரங்கள் வாடகைக்கு என்ற தேர்வில் இ-வாடகை மூலம் பதிவு செய்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு திருவள்ளூர் (வேளாண்மை பொறியியல்) உதவி செயற்பொறியாளர், திருத்தணி (வேளாண்மை பொறியியல்) உதவி செயற்பொறியாளர், பொன்னேரி (வேளாண்மை பொறியியல்) உதவி செயற்பொறியாளர் போன்ற அலுவலகங்களை நேரில் அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story