புத்தாண்டை முன்னிட்டு நெல்லை வண்ணாரப்பேட்டை மேம்பாலத்தில் போக்குவரத்து தடை


புத்தாண்டை முன்னிட்டு நெல்லை வண்ணாரப்பேட்டை மேம்பாலத்தில் போக்குவரத்து தடை
x

நெல்லை மாநகரின் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை,

ஆங்கில புத்தாண்டு இன்று இரவு கொண்டாடப்பட்ட உள்ள நிலையில், போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் அபாயகரமான முறையில் செல்பவர்களை கண்டறியும் வகையில், நெல்லை மாநகரின் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையாளர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.



1 More update

Next Story